fbpx

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு படப்பிடிப்பில் விபத்து!

பாலிவுட்டின் பிரபலமான நடிகர் அக்சய் குமார். இவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு பெயர் பெற்றவர். தற்போது இவரது படே மியான் சோட்டா மியான் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் அக்சய் குமார். உடன் டைகர் ஷெராப், ஜான்வி கபூர், பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பயங்கரமான ஆக்ஷ்சன் காட்சிகளுடன் தயாராகி வரும் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் தற்போது ஸ்காட்லாந்து நாட்டில் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

இன்று டைகர் ஷெராப் மற்றும் அக்சய் குமார் ஆகியோர் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தபோது அக்சய் குமாருக்கு விபத்து ஏற்பட்டு முழங்காலில் அடிபட்டதாக தெரிகிறது. இதனால் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அக்சய் குமார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே சண்டைக் காட்சிகளின் போது டூப்பு இல்லாமல் அவரே நடிப்பார். அவர் திரைப்பட நடிகரோடு மட்டுமல்லாமல் தற்காப்பு கலை நிபுணரும் ஆவார். டைகர் ஷெரப்பும் அக்ஷசய் குமாரும் இணைந்து நடித்த பயங்கரமான ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Rupa

Next Post

சருமத்தில் எண்ணெய் வழிகிறதா? ... கோடைக்கால ஸ்கின் டிப்ஸ் இதோ!... கட்டாயம் பின்பற்றுங்கள்!

Sat Mar 25 , 2023
கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சருமம் கொண்டவர்கள் பருக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம். மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப சருமத்தில் பல்வேறு ஆரோக்கியமற்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. அதாவது, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வப்போது தண்ணீரில் முகத்தை கழுவுவது, பால் பொருட்களை அளவுடன் சாப்பிடுவது, வெயிலில் அதிக நேரம் அலையாமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை […]

You May Like