fbpx

முதல் மனைவிக்கு செய்த துரோகம்..!! உண்மைய போட்டுடைத்த கமலா ஹரிஸ் கணவர்..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப், தனது முதல் திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்திகளின்படி, “எனது முதல் மனைவியின் பெயர் கெர்ஸ்டின் (Kerstin). எங்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தன. என் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்று அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் உறவை மேம்படுத்தினேன்” என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘ கெர்ஸ்டினுக்கும் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் குழந்தைகளின் பள்ளி ஆசிரியை நஜேன் நெய்லருடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவரும் கர்ப்பமாக இருந்தார், அதனால் எனது முதல் திருமணம் முறிந்தது. இந்த விவகாரம் வெளியானதையடுத்து, நெய்லர் தனது பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விலக நேரிட்டதாக கூறினார். டக்ளஸ் மற்றும் கெர்ஸ்டின் 19 வருட திருமணத்திற்குப் பிறகு 2009-இல் விவாகரத்து செய்தனர். 2014-ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ்-டக்ளஸ் எம்ஹாஃப் திருமணம் நடந்தது. இது கமலாவின் முதல் திருமணமும், டக்ளஸின் இரண்டாவது திருமணமும் ஆகும்.

முதல் பார்வையிலேயே கமலா ஹாரிஸை காதலித்ததாக டக்ளஸ் கூறினார். 1 வருட உறவுக்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது டக்ளஸின் கள்ளத்தொடர்பு குறித்து கமலா ஹாரிஸ் அறிந்திருந்தார். 2020-இல் பைடனின் தேர்தல் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, ​​​​டக்ளஸ் குறித்து பைடன் குழுவிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், டக்ளஸின் முதல் மனைவி கெர்ஸ்டினும் டக்ளஸை ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் இருவரும் பல்வேறு காரணங்களுக்காக எங்கள் திருமணத்தை முடிக்க முடிவு செய்தோம். அவர் ஒரு அற்புதமான தந்தை மற்றும் எனக்கு சிறந்த நண்பர். டக்ளஸ், கமலா மற்றும் நான் நன்றாக பழகுகிறோம், நங்கள் குடும்பமாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

Read more ; கர்ப்பிணியை நிர்வாணமாக்கி ஊர்வலம்..!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

English Summary

‘During my marriage …’: Kamala Harris’ husband Doug Emhoff admits cheating on first wife as nanny pregn

Next Post

விஜய்யை வெச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!! Dolly Chai Wala-வை வச்சி டூப் போட்ருக்காங்க..!!

Mon Aug 5 , 2024
Vijay's look, which has been shown to be youthful through de-aging technology in the film Code, has been popularized by many.

You May Like