துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி நேற்று மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூரில் தனது 99 வயதில் காலமானார். நேற்று மாலை 3 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே அவரை நைட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி, மத்தியில் பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்பட்டவர். 1982ல் குஜராத்தின் துவாரகாவில் உள்ள துவாரகா சாரதா பீடத்திற்கும், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் மடத்திற்கும் சங்கராச்சாரியார் ஆனார்.துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.