fbpx

BSNL சிம் கார்டு வாங்க போகும் நபர்களே கவனம்..! 8-ம் தேதி முதல் ஏலம்.. முக்கிய அறிவிப்பு…!

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 08.11.2023 முதல் 14.11.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 14.11.2023 ஆகும்.மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். குறிப்பாக, சிலருக்கு நம் பிறந்த தேதி, வருடம் அல்லது வாகன எண் அல்லது ஏதோ பிடித்த எண் தொலைபேசி எண்ணின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உள்ள எண்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தனி ஆர்வம் இருக்கும்.

சிலர் அலுவலக பயன்பாட்டிற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக தொடர்ச்சியான எண்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான வேனிட்டி எண்களை வழங்குகிறது.

Vignesh

Next Post

சூதாட்ட செயலி உள்பட 22 செயலிகள் முடக்கம்..!! மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு இதுதான் காரணமா..?

Mon Nov 6 , 2023
மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (காங்கிரஸ்) கோடிக்கணக்கில் பணம் பெற்றார் என அமலாக்கத்துறை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக […]

You May Like