Bolivia: பொலிவியாவின் தெற்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 37 பேர் பரிதாபமாக பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பொலிவியா உயுனி முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இந்தநிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் உயுனி (Uyuni), கொல்சானி (Colchani) ஆகிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 39 பேர் படுகாயமடைந்தனர். விபத்து எதனால் நேர்ந்தது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் பேருந்துகளில் ஒன்று எதிரே உள்ள சாலைத் தடத்தை நோக்கி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிர்பிழைத்த ஓட்டுநர்களில் ஒருவர் மதுபானம் அருந்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர் மதுபான ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆங்காங்கே சிதறி கிடந்த உடல்களை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். பொலிவியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,400 பேர் சாலை விபத்துகளில் மரணமடைவதாக அரசாங்கத் தகவல் தரவுகள் காட்டுகின்றன.
Readmore: WPL 2025!. சொந்த மண்ணில் 4வது தோல்வி!. RCB-ஐ வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி!.