ஜம்மு-காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் …

Omni Bus | தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினை எதிர்த்தும், அதனடிப்படையில், …

தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாக இடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; தமிழகத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து சென்றவர்கள் தற்போது 75 சதவீதம் பேர் கார்களில் பயணம் செய்கின்றனர். நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை 25 …

சென்னை நகர பேருந்தில் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த பலகை உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே …

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிபயணம் செய்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார்.…

திண்டுக்கல் மாவட்டத்தில், பேருந்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாமனாரிடம் வரதட்சணையாக பைக் வாங்க சென்ற இடத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி …

ஜனவரி 25-ம் தேதி தைப்பூசம், 26-ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை கருத்தில்கொண்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஜனவரி 25-ம் …

அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது (ம) பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து …

இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என 6 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

திட்டமிட்டபடி இன்று போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

மேலும் ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 …