fbpx

இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்படினா உங்கள் வீட்டிற்கு நிதி நெருக்கடி வரப்போகுது..!! உடனே இதை பண்ணுங்க..!!

வீட்டில் வரவுள்ள நிதி நெருக்கடியை சில அறிகுறிகள் மூலம் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனாலேயே பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர். அப்படி நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கிவிட்டதை எப்படி கண்டுகொள்ளலாம் என சாணக்கியரின் கூற்றை பார்க்கலாம்.

துளசி செடி : பொதுவாக துளசி செடியை பலர் வீடுகளில் வைத்திருப்பார்கள். ஆனால், துளசி செடி உங்கள் கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது, துளசி செடி வீடுகளில் வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக அர்த்தம். அதனால், துளசி செடி வாடினால் உங்களுக்கான கெட்ட காலத்தை உணர்த்துவதை நினைவில் கொள்ளுங்கள்.

கண்ணாடி உடைதல் : வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணமாக பார்க்கப்படுகிறது. சாணக்கியர் கூற்றுபடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் யாருக்காவது பிரச்சனை வரும்.

தினசரி சண்டை : உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார். இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும்.

பெரியோரை அவமதிப்பது : சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை மதிக்காத வீட்டில் லட்சுமி வசிக்க மாட்டார். மேலும், வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது. அதனால் தான் எப்போதும் உங்களை பெரியவர்களை மதித்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பூஜை இல்லாத வீடு : வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட சாணக்கியர் கூற்றுப்படி தவறாமல் பூஜை செய்ய வேண்டும். தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார். பூஜை அறை தூசி படிந்து காணப்படுவதும் கெட்ட சகுணத்தை உணர்த்துவதாகும்.

Read More : புயலை கிளப்பிய விஜய்..!! ஆட்சியில் பங்கு வேண்டும்..!! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!!

English Summary

It is said that we can find the financial crisis coming at home through some signs. Let’s see what they are in this post.

Chella

Next Post

வீட்டில் இதை செய்தால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!! பெண்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Oct 29 , 2024
For the future of the children to be better, to get the grace of the deity, just lighting a lamp is enough. Let's see what it is in this post.

You May Like