fbpx

செல்போனில் நிலநடுக்கம் அலெர்ட்!… முன்கூட்டியே தெரிந்துகொள்ள புதிய அம்சம்!… கூகுள் நிறுவனம் அறிமுகம்!

நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை, ‘மொபைல் போன்’ வாயிலாக பொது மக்களுக்கு முன்கூட்டியே வழங்கும் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல்வேறு நாடுகளில், ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’ இயங்கு தளம் வாயிலாக நிலநடுக்க எச்சரிக்கை அளிக்கும் சேவை ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது இந்த சேவை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நில அதிர்வு மையம் உதவியுடன், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு மொபைல் போன் சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்தால், அது சென்சாரை பயன்படுத்தி, நிலநடுக்கத்தின் துவக்கநிலையை எளிதாகக் கண்டறியும். ஒரே நேரத்தில் பல மொபைல் போன்கள் நிலநடுக்க அதிர்வுகளை கண்டறியும்போது, எங்களது சர்வர் உடனடியாக பயனர்களுக்கு நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை அனுப்பும். ஒளியின் வேகத்தில் இன்டர்நெட் சிக்னல்கள் பயணிப்பதால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே, அது குறித்த எச்சரிக்கை, பயனர்களுக்கு மொபைல் போனில் அனுப்பப்பட்டு விடும்.

இந்த சேவை, ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கு மேற்பட்ட மொபைல் போன் பயனர்களுக்கு கிடைக்கும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் குறித்த தகவல்களை, கூகுள் தேடல், கூகுள் மேப்ஸ் வாயிலாக பயனர்களுக்கு வழங்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் பணியாற்றி வருகிறோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

இளைஞர்களே ரெடியா?… புதிதாக 50000 பேருக்கு அரசுப்பணி!… முதலமைச்சர் அறிவிப்பு!

Thu Sep 28 , 2023
அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் அரசுப்பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் […]

You May Like