இன்று அதிகாலை பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, அதிகாலை 2.58 மணியளவில் (IST) நாட்டின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
EQ of M: 4.3, On: 02/04/2025 02:58:59 IST, Lat: 32.01 N, Long: 69.71 E, Depth: 120 Km, Location: Pakistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 1, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/nl3xD9gw34
கடந்த சில தினங்களுக்கு முன் மியான்மார் மற்றும் தாய்லாந்து பகுதிகளில் 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய சேதத்தை ஏற்ப்படுத்தியது இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியா வரையிலான பகுதிகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு, பிப்ரவரி 28ஆம் தேதி 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. மேலும், பிப்ரவரி 16ஆம் தேதி, ராவல்பிண்டியின் தென்கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில், 17 கிலோமீட்டர் ஆழத்தில் மையப்பகுதியுடன் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த அதிர்வுகள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் பரவலாக உணரப்பட்டன.
இன்று அதிகாலை பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணாமாக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவலும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
Read More: பாங்காக்கில் தரைமட்டமான 30 மாடி கட்டடம்.. சீனாவை சேர்ந்த 5 பேர் கைது..!! என்ன காரணம்….