இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு காசி மலை பகுதியான நாங்ஸ்டோயின் அருகே 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிக்கையின் படி, நிலநடுக்கம் நேற்று, இரவு 7:23 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கங்கள் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட வலுவாக உணரப்படுகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.4 ரிக்டராகப் பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.