ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. நள்ளிரவு 12.10 மணியளவில் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 93 கிமீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் 180 கிமீ என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு 7.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிலோ மீட்டர் தொலைவில், 70 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.