fbpx

பயங்கரம்…! மணிப்பூரில் இரவு நேரத்தில் நிலநடுக்கம்…! ரிக்டர் அளவு 4.4 ஆக பதிவு…!

மணிப்பூரில் நேற்று இரவு 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மணிப்பூரின் மொய்ராங் மாவட்டத்தில் இருந்து 75 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை உயிர் சேதமோ, மற்ற பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நிலநடுக்கத்தின் மையம் மொய்ராங்கிலிருந்து 75 கிமீ கிழக்கு-தென்கிழக்கே பதிவாகியுள்ளது. இந்த வடகிழக்கு மாநிலம் மண்டலம் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தில் ஆபத்தான மண்டலமாக உள்ளது, மணிப்பூரில் இதுபோன்ற நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படக்கூடும்.

Vignesh

Next Post

தீபாவளி அன்று கனமழை பெய்ய வாய்ப்பு...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Sat Oct 22 , 2022
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். பிறகு வடதிசையில் […]
அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!! இந்த தேதிகளில் கன்ஃபார்ம்..!! மக்களே தயாரா இருங்க..!!

You May Like