அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேபாளம், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும் அதிரவைத்தன. இந்நிலையில், இன்று அதிகாலை 3.20 மணிக்கு அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 அலகுகளாகப் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.