fbpx

7 மணி நேரம் போதும், செலவே இல்லாமல், உங்கள் அழகை கெடுக்கும் மருக்களை நீக்கலாம்.. எப்படி தெரியுமா?

தோலில் இருந்து தொங்கும் சிறிய வளர்ச்சியை தான் (மருக்கள்) அக்ரோகார்டன்ஸ் அல்லது கட்னியஸ் பாப்பிலோமாக்கள் என்று கூறுவது உண்டு. தோலின் மடிப்புகள் ஏற்படும் இடங்களான கழுத்து, அக்குள், தொப்புள் மற்றும் கண் இமைகள் போன்ற பகுதிகளில் தான் இந்த பாப்பிலோமாக்கள் அதிகம் காணப்படும். பொதுவாக இந்த மருக்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் வரும். அதே சமயம் குடும்பத்தில் யாருக்காவது இந்த மருக்கள் இருந்தால் அடுத்த சந்ததியினருக்கும் இந்த மருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். உடல் எடை அதிகரித்தாலும், மருக்கள் தோன்றும்.

இந்த மருக்களால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இவைகள் ஒருவரின் அழகையே கெடுத்து விடும். இதனால் பலர் மருத்துவமனைகள் அல்லது பியூட்டி பார்லருக்கு சென்று அகற்றுவது உண்டு. ஆனால், அதற்கு ஏராளமான பணம் செலவாகும். இதற்க்கு பதில், நீங்கள் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எந்த செலவும் இல்லாமல் மருக்களை அகற்றலாம். ஆம், நமது கிச்சனில் இருக்கும் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த மருக்களை அகற்றி விடலாம்.

இதற்க்கு நீங்கள், சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டி, மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து சாறு எடுத்து, சாறுடன் தூள் உப்பை சேர்த்து பசை பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும். பின்னர், சிறிது பஞ்சை கலக்கி வைத்திருக்கும் வெங்காய சாறில் நனைத்து மருவின் மீது ஒத்தி எடுக்க வேண்டும். வேண்டுமானால் வெங்காய சாற்றில் நனைத்த பஞ்சை மருவின் மீது பிளாஸ்தர் போட்டு ஒட்டி விடலாம். சுமார் 7 மணி நேரம் கழித்து, அந்த பஞ்சை எடுத்தால் மருவும் சேர்ந்து நீங்கி விடும்.

Read more: அல்சர் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த ஒரு பழம் சாப்பிடுங்க, இனி வயிற்று வலியே இருக்காது!! டாக்டர் சிவராமன் அட்வைஸ்..

English Summary

easy home remedy to remove warts at home using onion

Next Post

பெற்றோர்களே கவனம்!!! குழந்தைகள் மாரடைப்பால் உயிரிழக்க இது தான் காரணம்...

Fri Jan 10 , 2025
reason for heart attack deaths among school children

You May Like