மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தடுத்தல் மற்றும் பூச்சிக்கொல்லியின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நெல், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியான கார்போசல்ஃபான் (Carbosulfan) மீது மத்திய அரசு முழுமையான தடையைப் பரிந்துரைத்துள்ளது. இதன் நச்சுத்தன்மை மற்றும் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை […]

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கத்திற்கு தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி குறைவு, சாதகமற்ற காலநிலை, மண் வளம் பாதிப்பு மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாகச் சமீபத்திய ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தவும் 2025-26 மத்திய பட்ஜெட்டில் ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம்’  அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலநிலைக்கேற்ற மற்றும் பூச்சிகளை எதிர்க்கக்கூடிய […]

பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) […]