பொதுவாக சாலைகளில் உள்ள எந்த ஸ்நாக்ஸ் வாங்கினாலும் பெரும்பாலும் அதை செய்திதாள்களில் தான் கொடுப்பார்கள். குறிப்பாக வடை.. வடையை சுட சுட செய்தி தாளில் வைத்து கொடுப்பார்கள்.. இந்த ஒரு பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், செய்தி தாள்களில் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவது நல்லதா?? வாருங்கள் பார்ப்போம்.. பொதுவாக, செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை, எதிர்மறையான ஆரோக்கிய விளைவுகளைக் ஏற்படுத்தும். இது உணவை மாசுபடுத்துவதால், அதனை சாப்பிடும் போது நமது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆம், செய்தித்தாள் மையில் ஐசோப்ரோபைல் பித்தலேட், டீன் ஐசோப்ரோபைலேட் போன்ற பல ஆபத்தான இரசாயன பொருட்கள் இருக்கும்..
இதனால், சூடான உணவை செய்தித்தாளில் வைக்கும் போது, அதில் உள்ள மை உணவில் ஒட்டி விடுகிறது. அந்த உணவை நாம் சாப்பிடும் போது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டும் இல்லாமல், பல செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதோடு, வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், செய்திதாளில் உள்ள மையில் ஐசோபிரைல் ஆல்கஹால், பாலிஎதிலீன் கிளைகோல், டைதிலீன் கிளைகோல் போன்ற இரசாயனங்கள் இருப்பதால், இவைகள் உடலுக்குள் நுழைந்து ஹார்மோன்களை பாதிக்கும். இதனால் தைராய்டு, இன்சுலின், ஈஸ்ட்ரோஜன் போன்ற உடலின் பல்வேறு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்..