தமிழ்நாட்டில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06.06.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்கவில்லையா..? இனி நீங்களும் விண்ணப்பிக்கலாம்..!!

English Summary

Heavy rain is likely to occur in 15 districts in Tamil Nadu today and 13 districts tomorrow, according to the Meteorological Department.

Chella

Next Post

தள்ளிப்போகும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா..!

Thu Jun 6 , 2024
Chandrababu Naidu's inauguration ceremony as Andhra Chief Minister has been postponed.

You May Like