fbpx

சேனைக்கிழங்கு சாப்பிட்டால், புற்றுநோயை தடுக்கலாமா….?

சேனைக்கிழங்கில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதீத மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த சேனைக்கிழங்கு பல மருத்துவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. பொதுவாக கிழங்கு வகைகளில், வெகுகாலமாக வைத்திருந்து இந்த சேனைக்கிழங்கை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சேனைக்கிழங்கு ஈரம் நிறைந்த பிரதேசங்களில் அதிகமாக விளையும் என்று கூறப்படுகிறது.

அதேபோல இந்த கிழங்கில் முக்கியமான மாவுச்சத்து உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. உருளைக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு ஆகியவற்றைப் போல பயன்படுத்தப்பட்டாலும் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரையில் இந்த சேனைக்கிழங்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று இந்த சேனைக்கிழங்கில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், நார்சத்து, மங்கனீஸ் சத்துக்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், சோடியம் குறைவு என்று ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

100 கிராம் சேனை கிழங்கில்,  நீர்சத்து 66 கிராம், கொழுப்பு 1.5 கிராம், புரதம் 9.81 கிராம் ,நார்சத்து 5.7 கிராம், பொட்டாசியம் 1,208 கிராம், மிகி கால்சியம் 20 கிராம், போன்ற பல சத்துக்கள் இருக்கிறதாம். இந்த சேனைக்கிழங்கை வெகு காலம் வைத்து பயன்படுத்துவதாலேயே இது மற்ற காய்கறிகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை சாப்பிடுவதன் காரணமாக, உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மூட்டு வலி பெருங்குடல் அழற்சி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சேனைக்கிழங்கு கல்லீரலை பாதுகாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சேனைக்கிழங்கு புற்றுநோயையும் வெகுவாக கட்டுப்படுத்துகிறது. அதோடு சருமத்தை எப்போதும் இளமையாக வைப்பதற்கும் இது உதவி புரிகிறது.

சர்க்கரை நோயையும் இது கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் சேனைக்கிழங்கு ஹார்மோன்களை சம நிலையில் வைக்கிறது. அதோடு மன அழுத்தத்தை குறைக்கவும் செய்கிறது. இதன் காரணமாக, மாதவிடாய்க்கு முன்னதாக உண்டாகும் வலியை வெகுவாக குறைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைத்து ஒருவருக்கு தேவையற்ற மன எண்ணம் உருவாவதை தடுப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சரிசெய்ய உதவிகரமாக இருக்கிறது. செரிமான பிரச்சனையை தடுத்து, மலச்சிக்கலில் இருந்தும் ஒருவரை விடுவிக்கிறது இந்த சேனைக்கிழங்கு.

Next Post

இந்த லிஸ்டில் உங்க ராசி இருக்கா, அப்படின்னா ஜாக்கிரதையா இருங்க....! பெண்களால் அவதிக்குள்ளாகும் ராசிகள்....!

Thu Oct 12 , 2023
ஒருவருடைய வாழ்வில்  பெண் சாபம் என்பது தொடர்ந்து தோல்வியை கொடுக்கும். பெண் சாபத்தை பெற்ற நபர்கள் தங்களுடைய வீட்டில் உள்ள பெண்களின் மூலமாக, தொடர்ந்து, பல பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். எந்தெந்த ராசிினருக்கு பெண் சாபம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி தற்போது நான் தெரிந்து கொள்ளலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு பெண் சாபம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மீன ராசியை பொறுத்தவரையில் இங்கே சுக்கிரன் உச்சமடைவார் […]

You May Like