fbpx

ரூ.9,000 ஊதியம்…! மின் துறையில் வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு மொத்தம் 5 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மதுரையில் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304

Vignesh

Next Post

பெரும் அதிர்ச்சி..!! பள்ளியில் மயங்கி விழுந்த 16 வயது சிறுமி..!! மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!!

Sat Jan 28 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அங்கு குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற மாணவி விரிந்தா, ஒத்திகை முடிந்து வகுப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சுமார் 12 மணியளவில் திடீரென மயங்கி விழுந்த மாணவியை, அங்கிருந்த ஆசிரியர்கள் […]
பெரும் அதிர்ச்சி..!! பள்ளியில் மயங்கி விழுந்த 16 வயது சிறுமி..!! மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!!

You May Like