மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த Electrician பணிகளுக்கு மொத்தம் இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மதுரையில் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304