Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், 17 மணி நேர தீவிர தேடலுக்குப் பிறகு மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இறுதியாக விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் இருப்பது பதிவாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாது, பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Read More : ’அடையாளமே தெரியல’..!! நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அதிபரின் உடல் மீட்பு..!!