fbpx

செந்தில் பாலாஜி வழக்கு…..! அமலாக்கத்துறை மேல்முறையீட்டை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்…..!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. நெஞ்சுவலியின் காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமரவு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்தும், மருத்துவமனைக்கு வெளியே அவரை அழைத்து செல்லக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்புடையதல்ல என்று கூறினார். சாதாரண மனிதனுக்கு இது போன்ற உத்தரவுகள் வழங்கப்படாது எனவும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தன் மூலமாக தவறான முன்னுதாரணத்தை வழங்கி இருப்பதாகவும் முறையிட்டார். ஆனால் உச்ச நீதிமன்றத்தை தற்போதைய நிலையில் சந்தேகிக்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

ஆனால் அமலாக்கத்துறை உயர்நீதிமன்றம் முன்பு மீண்டும் முறையிடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இருந்தாலும், கைது செய்யப்பட்டு முதல் 15 நாட்கள் விசாரணைக்கு மிகவும் முக்கியமானது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறியாக இருப்பதாகவும், விசாரணையை தாமதப்படுத்துவதற்காகவே இது போன்ற செயல்பாடுகளை செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இதயத்தில் இருக்கின்ற அடைப்புகளை போலியாக காட்ட முடியுமா? என்று செந்தில் பாலாஜியின் மனைவியின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், மறுபடியும் மருத்துவ குழு அமைத்து செந்தில் பாலாஜியை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு முழுமையான அதிகாரம் இருப்பதாக தெரிவித்தனர். அமர்வு நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் கஸ்டடி தொடர்பான விசாரணையை நடத்தி வருகின்ற நிலையில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததற்கு நீதிபதிகளுக்கு கடுமையான அதிருப்த்தியை தெரிவித்துள்ளனர்.

அதோடு அமலாக்கத் துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

Next Post

புயலை முன்கூட்டியே அறியும் பெண்..!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்ததால் கிடைத்த வரம்..!!

Wed Jun 21 , 2023
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜூன் 2009-இல் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென இந்தப் பெண்ணை மின்னல் தாக்கியுள்ளது. அதனால், அவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமையலறையின் கூரையில் இருந்த ஒரு விளக்கின் வழியாக ஊடுருவி, க்ரோன் சமைக்க வைத்திருந்த ஒரு எண்ணெய் கடாய் மீது தாக்கி அதை தூக்கி எரிந்தது. அதன் பிறகு, அதிலிருந்து வெளிப்பட்ட மின்னல் […]

You May Like