fbpx

ED அதிரடி…! முன்னாள் துணை முதல்வருக்கு சொந்தமான ரூ.52.24 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்…!

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. இன்று வரை அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவரது மனைவி சீமா, தொழிலதிபர் கவுதம் மல்ஹொத்ரா உள்ளிட்டோரின் 52.24 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது

Vignesh

Next Post

மூளையை பாதிக்கும் அறியவகை அமீபா தொற்று!... கேரளாவில் 15 வயது சிறுவன் பலி!

Sat Jul 8 , 2023
மூளையை பாதிக்கும் அறியவகை அமீபா தொற்று காரணமாக கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நோய் அமீபா மூலம் பரவுகிறது. நாசித்துவாரங்கள் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளையை சென்று தாக்குகிறது. இது முதன்முதலாக 2016-ம் ஆண்டு […]

You May Like