fbpx

சற்றுமுன்…! பொன்முடி மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் ED ரெய்டு…! ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்…!

அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனையின் போது எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, சைதாப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத்துறை எம்.பி கவுத சிகமாணிக்கு சொந்தமான ரூ. 8 கோடி சொத்துகள் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?... யார் கண்டுபிடித்தது தெரியுமா?

Mon Jul 17 , 2023
புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், […]

You May Like