Edappadi K. Palaniswami | தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.
சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் திறக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.