fbpx

முக்கிய அரசியல் தலைவரின் தாயார் காலமானார்…! எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் உம்மு சலிமா (80) காலமானார்.

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் உம்மு சலிமா (80) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். நாகை மாவட்டம் தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில், அவரது உடல் நேற்று மாலை 6 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து இரங்கல் செய்தி பதிவு செய்த வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியில்; மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அத்தம்மா (எ) உம்மு சலிமா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்பு அன்னையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த அத்தம்மா (எ) உம்மு சலிமா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில்; மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் அன்பு நண்பருமான தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் உம்மு சலிமா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தாயாரை இழந்து வாடும் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

குழந்தை தத்தெடுக்கிறீர்களா?… மத்திய அரசின் பிரத்யேக இணையதளம்!

Mon Dec 18 , 2023
குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க ‘கேரிங்க்ஸ்’ (CARINGS) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டப்பூர்வமாக சிக்கல்களைப் போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். அதில், 5 ஆண்டுகள் குழந்தையைப் பராமரித்து சான்று பெற்ற பின்புதான் தத்தெடுக்க முடியும் என்ற […]

You May Like