அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக மாநில அளவிலான மாநாடு இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பை அளித்தனர். மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவின் 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம்த்தில் அதிமுக கோடியை ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக மாநாட்டை ஒட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களை தொடங்கியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியாக இருந்த போதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக உள்ளதால் தென் மாவட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனால் தென் பகுதியிலும் தனது பலத்தை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி, மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாட்டை இன்று நடத்துகிறார். கலை நிகழ்ச்சிகள், தொண்டர்கள் வரவேற்பு என்று உற்சாகமாக நடந்து வரும் இந்த மாநாட்டில் மாலை 5 மணிக்கு எடப்பாடி பனைசாமி உரையாற்றுகிறார்.