அடுத்த ’ஸ்கெட்ச்’ போடும் எடப்பாடி பழனிசாமி..! அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..!

பொதுக்குழு தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி, பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tamil Nadu New Cabinet: Here is Edappadi Palanisami's full list of  ministers and portfolios | India News,The Indian Express

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர்..! சற்றுமுன் நடந்த வாக்கெடுப்பில் அதிரடி தேர்வு..!

Sun Jul 3 , 2022
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் […]
சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர்..! சற்றுமுன் நடந்த வாக்கெடுப்பில் அதிரடி தேர்வு..!

You May Like