fbpx

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக விசாரிப்பு..! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை அன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

CM Edappadi Palanisamy pays tribute to Dr V Shanta - Simplicity

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் (ஜூலை 6) புதன்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்வதாக இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

Chella

Next Post

பழைய உத்தரவுகள் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும்.. உயர்நீதிமன்றம் கருத்து..

Mon Jul 4 , 2022
பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் […]

You May Like