எடப்பாடி ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி; அதிமுகவின் பொது செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அவர்களின் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. தங்கமணி திருந்த வேண்டும் இல்லையென்றால் களத்தில் இறங்க வேண்டி இருக்கும்.
அவர் வேண்டுமானால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதியில் எந்த ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறட்டும் பார்க்கலாம். அ.தி.மு.க பிரிந்து இருக்கும் நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் வந்தால் இரட்டை இலை சின்னம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. எடப்பாடி பழனிச்சாமி உடன் நெருக்கமாக இருப்பவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.