காதலர் தினத்தை கொண்டாட கல்லூரி நிறுவனம் ஒன்று அறிவித்ததாக கூறப்படும் டிவிட்டர் பதிவு ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆகாஷ் இன்ஸ்டிடியூட் என்ற டெல்லியை சேர்ந்த கல்வி நிறுவனத்தின் கிளைத் தலைவர் அறிவித்ததாக கூறப்படும் அந்த போஸ்ட் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு முதல் கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் காதலர் தின விருந்தில், கலந்து கொள்ள விரும்புவோர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் ஒரு காதல் இணையை தேடிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும், வாழ்க்கையில் வெற்றியடையவும் இந்த செயல்பாடு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே. ஜாதி, மதம், நிறம், மதம் மற்றும் பாலினம் என எந்தவிதம் வேறுபாடின்றி மாணவர்கள் தங்களுக்கு ஒரு காதல் ஜோடியை தெரிவு செய்து காதலர் தின விருந்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இது போன்ற நிகழ்ச்சி நம்ம காலேஜ் படிக்கும் போது நடக்கலையே என நெட்டிசன்கள் தங்கள் வயிற்றெரிச்சலை கொட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த பதிவில் உள்ள அறிவிப்பு உண்மைதானா என்ற தகவலை அந்த கல்வி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.