fbpx

எச்சரிக்கை.! டீ குடிக்கும் போது ஸ்னாக்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்.? உங்களுக்குத்தான் இந்த செய்தி.!

பொதுவாகவே தினமும் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்துவது நம்மில் பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் கொஞ்சம் தின்பண்டங்கள் சேர்த்து டீ குடித்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாறு டீயுடன் ஒரு சில ஸ்நாக்ஸ்களை சாப்பிடும் போது அவை உடலில் பலவகையான நோய்களை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் போது பலரும் காரசாரமான தின்பண்டங்களை எடுத்துக் கொள்கின்றனர். அவ்வாறு வெறும் வயிற்றில் காரசாரமான தின்பண்டங்களை உண்ணும் போது செரிமான கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.

அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை டீயுடன் சேர்த்து உண்ணும் பொழுது உணவுக் குழாயில் அலர்ஜி மற்றும் திடீர் வீக்கத்தை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மேலும் கடல் உணவு, சிட்ரஸ் பழங்கள், பொரித்த தின்பண்டங்கள், சீஸ், அதிகப்படியான சர்க்கரை, பூண்டு அல்லது வெங்காயம் சேர்த்த உணவுகள் போன்றவற்றை டீ குடிப்பதற்கு முன்பாகவோ அல்லது குடித்து முடித்த பின்பாகவோ அரை மணி நேரம் வரை உண்பதை தவிர்த்து வருவது உடலில் நோய்களை கட்டுப்படுத்தும்.

Rupa

Next Post

சவால்களை கடந்து செல்லுமா?… சூரியனை ஆய்வுசெய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம்!… இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடையும்!

Sat Jan 6 , 2024
சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக […]

You May Like