fbpx

‘கத்தரிக்காய்’ உடலுக்கு நல்லதுதான்.. ஆனால்? இந்த பிரச்னை இருந்தா சாப்பிடாதீங்க!!

brinjal

காய்கறிகளில் மகத்தான ஒன்றாக கருதப்படும் கத்தரிக்காயில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.ஊதா, பச்சை நிறத்தில் நமக்கு கத்தரிக்காய் கிடைக்கிறது.இவற்றை நாம் சாம்பர், கூட்டு, பிரியாணிக்கு கிரேவி என பல கோணங்களில் பயன்படுத்துகிறோம்.

கத்தரிக்காய் என்பது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. இதில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்னை உள்ளவர்கள் கத்திரிக்காய் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

1) கத்திரிக்காயை அதிகமாக உட்கொள்வது பைல்ஸ் அல்லது மூல நோய் பிரச்னையை அதிகரிக்கும். எனவே, பைல்ஸ் நோயாளிகள் கத்தரிக்காயை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

2) சிறுநீரக கல் பிரச்னை இருப்பவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. கத்தரிக்காயில் ஆக்சலேட் என்ற தனிமம் இருப்பதால், கல் பிரச்னையை மேலும் அதிகரிக்கலாம்.

3) வாயு பிரச்னை அல்லது வயிற்று வலி போன்ற செரிமான பிரச்னை உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்று பிரச்னையை அதிகரிக்கும்.

4) மூட்டுவலி பிரச்னை உள்ளவர்களும் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கத்திரிக்காய் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கிறது. இது மேலும் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

5) நீங்கள் எடை குறைக்கும் டயட்டைப் பின்பற்றுகிறீர்கள் என்றால், கத்தரிக்காயை குறைக்க வேண்டும். கத்தரிக்காயை சமைக்க எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Readmore: கருவுறாமல் தடுக்கும் Copper-T பயன்படுத்துறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!!

Baskar

Next Post

ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பிக்க போறீங்களா? அப்போ இதெல்லாம் ரொம்ப முக்கியம்!!

Wed May 15 , 2024
ஆன்லைனில் கடன் வாங்குவதன் காரணமாக பலர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். நமக்கு உடனடியாக பணம் தேவை என்னும் பட்சத்தில் அவசரமாக கடன் விதிமுறைகளைப் படிக்க மறந்துவிட்டு லோனுக்கு அப்ளை செய்துவிடுகிறோம். பிறகு பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் நம்மை மனஉளைச்சலுக்கு தள்ளுகின்றன. இந்த காலக்கட்டத்தில் மக்கள் தங்களுக்கு பணம் தேவைப்பட்டவுடன் ஆன்லைனில் கடன் வாங்கத் தொடங்குகிறார்கள், உண்மையில் அவர்களுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. தவிர, ஆன்லைன் கடனில் எந்த […]

You May Like