fbpx

எடப்பாடி பழனிசாமியை அதிமுக-வின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்..!! தொண்டர்கள் உற்சாகம்..!!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு வழங்கினார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Chella

Next Post

நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன ஒரு சுவாரசிய தகவல்……!

Thu Apr 20 , 2023
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் நடிகர் விஜய் பிரபல இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தற்போது சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய் பற்றி நமக்கெல்லாம் தெரியாத ஒரு தகவலை கூறி இருக்கிறார். அது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில தனிப்பட்ட காரணங்களால், விஜய்க்கும், அவருடைய தந்தை சந்திரசேகருக்கும் சமீப காலமாக பேச்சுவார்த்தை இல்லை இருந்தாலும் தன்னுடைய மகன் […]

You May Like