fbpx

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..! ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு..!

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..! ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு..!

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். அவரது தரப்பில் கோவை செல்வராஜ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு..! மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

Sat Jul 30 , 2022
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, துணை மேயர் மகேஷ்குமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதுமே மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து கேள்வி எழுப்பினர். குறிப்பாக, மழைநீர் கால்வாய் அமைப்பதில் பணி மந்தமாக நடப்பதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்பு […]

You May Like