fbpx

Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவுசெய்த தேர்தல் ஆணையம்! ரசிகர்கள் அதிர்ச்சி… என்ன காரணம்?

நடிகர் அல்லு அர்ஜூன், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டி உள்ளிட்ட 3 பேர் மீது நந்தியாலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மக்களவைக்கும், 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் நந்தியால் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரவிச்சந்திரா ரெட்டி போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தனது நண்பரும், ஆளும் கட்சி வேட்பாளருமான ரவிச்சந்திரா ரெட்டி வீட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முன் அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு முன் அனுமதியின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை மீறியதாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, நந்தியாலா தொகுதியில் தேர்தலை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட, துணை தாசில்தார் ராமச்சந்திர ராவ் வழக்கு பதிவு செய்தார்.

இது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,“நான் என் விருப்பதின அடிப்படைய்யல் இங்கு வந்தேன். எனது நண்பர்கள் மத்தியில், அவர்கள் எந்த துறையில் இருந்தாலும், அவர்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால், நான் அவர்களுக்கு உதவுவேன். அதற்கு நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.

Next Post

'அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு..' அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்!

Sun May 12 , 2024
முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மதுரையில் அண்ணாமலை பேசும்போது முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையை விமர்சித்தார். இதைதொடர்ந்து, திமுக, அதிமுக கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தொடர்ந்து அவரது கருத்து பொய்யானது என்றும் கூறினார். இதை அண்ணாமலை தொடர்ந்து மறுத்து […]

You May Like