தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சோதனையின்போது வெளியூரை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கி இருந்தது, தெரியவந்ததை அடுத்து அவர்களை உடனே வெளியேறும்படி சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் வெளியூர் நபர்கள் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தனரா என்று கேட்டறிந்த பிறகே, அரை ஒதுக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்தினரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர். நாளை காலை தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.