fbpx

நாடு முழுவதும் உள்ள கண்டோன்மென்ட் வாரியங்களுக்கு தேர்தல்…!

கண்டோன்மென்ட் வாரியங்களில் காலியாகும் உறுப்பினர்கள் இடங்களை நிரப்புவதற்கு சாதாரண தேர்தல்கள் நடத்தப்படுகிறது. கண்டோன்மென்ட் தேர்தல் விதிகள் 2007-ன் படி கண்டோன்மென்ட் வாரிய தேர்தல்கள் நடைபெற்றது. இதன் விவரங்கள் டிஜிடிஇ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் செயின்ட் தாமஸ் மவுண்ட், வெலிங்டன் ஆகிய இரண்டு கண்டோன்மென்ட்கள் உள்ளன.

கண்டோன்மென்ட் சட்டம், 2006 இன் பிரிவு 28 இன் உட்பிரிவு (1) இன் படி, அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பின் மூலம் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் தேதியில் ஒவ்வொரு நபரும் பதினெட்டு வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். தகுதிபெறும் தேதிக்கு முந்தைய ஆறு மாதங்களுக்குக் குறையாமல் கண்டோன்மென்ட்டில் வசித்தவர், இல்லையெனில் தகுதி நீக்கம் செய்யப்படாவிட்டால், வாக்காளராகப் பதிவுசெய்ய உரிமை உண்டு.

வாக்காளராகச் சேர்வதற்கான தகுதியின்மைகள் சட்டத்தின் பிரிவு 28ன் உட்பிரிவு (2) இல் பட்டியலிடப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

வீட்டை விட்டு வெளியேறும் உதயநிதி..!! துணை முதல்வராக பதவியேற்கிறாரா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Tue Mar 21 , 2023
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வருகிறார். அங்கு முதல்வர் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், முதல்வரை பார்ப்பதற்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு இட நெருக்கடியும் பாதுகாப்பு பிரச்சனையும் உள்ளதால் அமைச்சர்களுக்கான பங்களாவில் குடியேற உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அவருக்காக தற்போது சென்னையில் உள்ள […]

You May Like