உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் அவை சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றம், இந்த முறையில் நன்கொடை பெறுவதைத் தடை செய்தது. மேலும், 2019 முதல் நன்கொடை விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையமும் இந்த தகவல்களை இணையத்தில் வெளியிட்டது. இருப்பினும், அதில் தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெறவில்லை.
இதனால் எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எப்போது நன்கொடை கொடுத்தது என்பது குறித்த தகவல்களை பெற முடியாத சூழல் இருந்தது. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ தரப்பை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து, முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக எஸ்பிஐ தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்தச் சூழலில் முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான முழு தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளதால், எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எப்போது நன்கொடை கொடுத்தது என்பது குறித்த தகவல்களை பெற முடியும்.
Read More : Electoral Bonds | தேர்தல் பத்திரம்..!! எந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை..!! இனி ஈசியா பார்க்கலாம்..!!