Electoral Bonds | தேர்தல் பத்திரம்..!! எந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை..!! இனி ஈசியா பார்க்கலாம்..!!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் அவை சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றம், இந்த முறையில் நன்கொடை பெறுவதைத் தடை செய்தது. மேலும், 2019 முதல் நன்கொடை விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையமும் இந்த தகவல்களை இணையத்தில் வெளியிட்டது. இருப்பினும், அதில் தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெறவில்லை.

இதனால் எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எப்போது நன்கொடை கொடுத்தது என்பது குறித்த தகவல்களை பெற முடியாத சூழல் இருந்தது. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ தரப்பை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து, முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக எஸ்பிஐ தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்தச் சூழலில் முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான முழு தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளதால், எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எப்போது நன்கொடை கொடுத்தது என்பது குறித்த தகவல்களை பெற முடியும்.

Read More : Electoral Bonds | தேர்தல் பத்திரம்..!! எந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை..!! இனி ஈசியா பார்க்கலாம்..!!

Chella

Next Post

Rain: மக்களே அலர்ட்!… சட்டென்று மாறிய வானிலை!… அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை!... எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

Fri Mar 22 , 2024
Rain: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மிதமாக பெய்ய மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், இந்த முறை கோடைக்காலத்தில் […]

You May Like