எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை மக்கள் தொகை உயர உயர, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்தபடியே இருக்கிறது. அதிலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாடு என்பது நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ, ஓலா, போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாகவே, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி + விற்பனையை பெருக்கி வருகிறது. அதனால்தான் நம்முடைய நாட்டில், 2024ஆம் நிதியாண்டில் 8.50 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
எனினும், எலக்ட்ரிக் பைக்குகளின் பங்கு, அதிகமாக இல்லை. இதற்கு காரணம், விலை அதிகமாக உள்ளதுடன், சார்ஜிங் ஸ்டேஷன்களும் அவ்வளவாக இல்லை. எனவே, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில், பொதுமக்களும் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதனால்தான், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மத்திய அரசு அதிகரிக்கும் வகையில், பல மகத்தான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம்.
அதாவது, எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் என்று இந்த திட்டத்துக்கு பெயர். இதை சுருக்கமாக இஎம்பிஎஸ் (EMPS-2024) என்கிறார்கள். இந்த திட்டத்தின்கீழ் எலக்ட்ரிக் பைக் வாங்கினால், 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3 லட்சம் பைக்குகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய 3 சக்கர வாகனங்கள் (இ-ரிக்ஷா) வாங்கினால், ரூ.25,000 வரை அரசின் உதவி வழங்கப்படும். பெரிய 3 சக்கர வாகனம் வாங்கினால், 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
எலக்ட்ரிக் பைக்குகள், எலக்டரிக் 3 சக்கர வாகனங்களின் விற்பனைக்காகவே, ரூ.500 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், எலக்ட்ரிக் பைக்குள், ட்ரை சைக்கிள்களின் விலைகள் குறையும் என்கிறார்கள். விலை குறைந்தாலே, பொதுமக்களின் தேவையும் அதிகரித்து, விற்பனையும் பெருகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.