2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான அணுகல் மற்றும் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, FAME இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 ஏப்ரல் 01 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த வரவு செலவுத் திட்ட ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
FAME II திட்டத்தின் கீழ் 7,090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மின்-மூன்று சக்கர வாகனங்கள், 55,000 மின்சார – நான்கு சக்கர பயணிகள் கார்கள் மற்றும் 10 லட்சம் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மானியங்கள் மூலம் பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
நாட்டில் பேட்டரியின் விலையைக் குறைப்பதற்காக, மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி செய்வதற்காக, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு அரசு 12 மே, 2021 அன்று ஒப்புதல் அளித்தது. பேட்டரி விலை குறைவதால் மின்சார வாகனங்களின் செலவு குறையும். ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் அடங்கும், இது 2021 செப்டம்பர் 15 அன்று ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.