fbpx

#TANGEDCO: “ஆதாருடன் மின் இணைப்பு” வருவோரிடம் அதை கேட்க கூடாது!!!

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றன. இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சார்பில் சில எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்யும் போது பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறப்பு முகாமுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதேபோல கணினியில் கோளாறு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக வேறு கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். காலையில் 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் இடைவெளி இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்று மின்வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Kathir

Next Post

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! டிசம்பர் 3-ம் தேதி வரை வெளுத்து வாங்க போகும் கனமழை...!

Wed Nov 30 , 2022
தமிழகத்தில் 3-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மற்றும் நாளை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 2, 3 ஆகிய […]

You May Like