fbpx

ஆதார் எண் இல்லை என்றாலும் மின் கட்டணம் செலுத்தலாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை பீளமேடு பகுதியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மின் இணைப்புடன் ஆதார் என் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திமுக அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். யார் பேரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்து இருக்கும் பட்சத்தில் அவர் குடும்பத்தில் ஒருவரின் பெயரை மாற்றிகொள்ள்ளலாம், அதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன இதில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம். ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் பிற மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

Kathir

Next Post

அதிரடி மாற்றம்...! கல்லூரியில் சேர இனி வாக்காளர் பதிவு கட்டாயம்...! 18 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டும்...!

Sat Nov 26 , 2022
மகாராஷ்டிர அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு வாக்காளர் பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜ்பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண்மைச் சாரா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியக் கல்வி கொள்கையின் கீழ் நான்காண்டு பட்டப் படிப்புகளை ஜூன் 2023 முதல் அரசு அறிமுகப்படுத்தும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் […]

You May Like