தமிழக மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால், தமிழகத்திற்கு மத்திய அரசின் மானியம் தரமாட்டோம் என்றும் மத்திய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என்றும் மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்கிறது. நுகர்வோர்களே 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.