தமிழக மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026-27 ஆம் வருடம் வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த எட்டுவருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் அமலில் இருக்கும். இந்த 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 55 ரூபாய் அதிகரிப்பு.
இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.155 அதிகரிப்பு.
400 யூனிட்கள் வரை இரண்டு மாதங்களுக்கு ரூ.295 அதிகரித்துள்ளது.
மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.595 அதிகமாக செலுத்த வேண்டும்.
500- 600 யூனிட்கள் வரை பயன்படுத்தினால், இரண்டு மாதங்களுக்கு ரூ.310 அதிகரிப்பு.
700 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.550 அதிகரிப்பு.
800 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.790 அதிகரிப்பு.
900 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.1,130 அதிகரிப்பு.
வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் இதுவரை 500 யூனிட்கள் வரை பயன்படுத்தியவர்களிம் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டது. 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் அதே விலையில் தான் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.