மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, புதுச்சேரியில் ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 ஆகிய 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு. கூடுதலாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோவா மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 2023-24 ஆம் ஆண்டிற்கான 31-03-2023 தேதியிட்ட மின் கட்டண நிர்ணய ஆணையில் கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சக்தி கொள்முதல் விலை சரிகட்டுதல் (FPPCA) வழிமுறை மற்றும் சூத்திரத்தின்படி, புதுவை அரசு, மின்துறை, 2023-24 ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடுகட்ட, விவசாய மற்றும் சிறு குடிசைகள் மின்நுகர்வோர் தவிர்த்து, மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமிருந்தும் கூடுதலாக FPPCA கட்டணங்களை வசூலிக்க உத்தேசித்துள்ளது என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2023-24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான FPPCA கட்டணங்கள், நுகர்வோர் வகைவாரியாக கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட கட்டணங்கள் நுகர்வோரிடமிருந்து, வரும் அக்டோபர் 2023 மாதம் முதல், டிசம்பர் 2023 மாதம் வரை. வசூலிக்கப்படும். முழு கட்டண விவரத்தை www.electricity.py.gov.in என்ற மின் துறையின் இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.