fbpx

ஷாக்…! ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு…! யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா…? முழு விவரம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2022 செப்டம்பர் 9-ம் தேதி மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது. அதேபோல கடந்த ஜூன் 30-ம் தேதி கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்து. தற்போது, 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆகவும், 401-500 யூனிட் வரை ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 501-600 யூனிட் வரை ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 801-1000 யூனிட் வரை ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு வசதிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்துக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது. நிலைக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.102-ல்இருந்து ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

English Summary

Electricity tariff increase from 1st July…! How much does the unit know?

Vignesh

Next Post

உங்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா...? உடனே இந்த இலவச எண்ணுக்கு கால் பண்ணுங்க...!

Tue Jul 16 , 2024
What to do if the magalir urimai thogai amount of Rs.1000 does not reach the bank account

You May Like