fbpx

வாகன ஓட்டிகளே…! 2022-ம் ஆண்டில் Fastag 46% அதிகரிப்பு…! மத்திய போக்குவரத்து துறை தகவல்…!

கடந்த சில ஆண்டுகளாக பாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.2022 டிசம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டாக் மூலம் வசூலான தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் 24-ந் தேதி மிக அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.144.19 கோடி வசூலாகியிருந்தது.

யாருக்கெல்லாம் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை..? வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன?

இதேபோல ஃபாஸ்ட்டாக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 48 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் பாஸ்ட்டாக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 219 கோடியாகவும், 2022-ல் 324 கோடியாகவும் இருந்தது. இதுவரை 6.4 கோடி ஃபாஸ்ட்டாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-ல் நாடு முழுவதும் பாஸ்ட்டாக்குகள் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 1181 (323 மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட). 2021-ல் இது 922 ஆக இருந்தது.

பாஸ்ட்டாக் திட்டத்தின் கீழ் மாநில சுங்கச்சாவடிகள் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 29 மாநில நிறுவனங்கள் மற்றும் ஆணையங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! மாதந்தோறும் உதவித்தொகை..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!!

Wed Jan 25 , 2023
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம். இந்த உதவித்தொகைக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி […]

You May Like