டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சமீபத்தில் நீக்கினார்.
இதற்கிடையில், நேற்று அதிகாரப்பூர்வ கணக்கு எனும் ப்ளூ டிக் பெற மாதம் 1600 ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்தார். தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவை அவர் நீக்கி இருக்கிறார். அந்த குழுவில் இருந்த 9 நபர்களையும் ஒற்றை அறிவிப்பில் நீக்கினார்.
ட்வீட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் தற்போது எலான் மஸ்க் மட்டுமே இருக்கின்றார். மேலும், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாகவும் எலான் மஸ்க் மட்டுமே இருப்பதாக அவரே தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.